சினிமாவில் தற்போது வரை நடிப்பில் கொடிகட்டி பறக்கும் நடிகை மீனா சூப்பர் ஸ்டாரின் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்பு கதாநாயகியாக நடித்தார். தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மீனா கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்த குழந்தையை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். தாயைப் போலவே குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் தெறி படத்தில் மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படம் ஆகும். அப்பொழுது குட்டிப் பெண்ணாக நடித்திருந்த நைனிகா தற்போது எப்படியிருக்கின்றார் என்பதை புகைப்படத்தில் காணலாம்.

இந்த புகைப்படத்தை பார்த்ததும் அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர். மீனாவின் மகள் நைனிகா சற்று வளர்ந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அட தெறி குழந்தையா இது என்று லைக்குகளை குவித்து வருகின்றனர். தெறி படம் வெளியாகி 4 வருடங்களே ஆகியுள்ள நிலையில் அவர் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது அனைவரும் ஆ ச்சர்யத்தில் ஆ ழ்த்தியுள்ளது.

By Admins