சமூகவலைதளத்தில் இப்போதெல்லாம் சில விசயங்கள் திடீர் திடீரென டிரெண்டாகிவிடுகிறது. அப்படியாக அண்மையில் ட்ரெண்ட் ஆனது தான் பூங்குயில் பாட்டு புடிச்சிருக்கா பாடல்.

1999 ல் ராஜகுமரன் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, அஜித் நடிப்பில் வெளியான நீ வருவாய் என படத்தில் இப்பாடல் இடம் பெற்றது.

கடந்த 2015 ல் தான் இப்பாடலை Youtube ல் பதிவேற்றம் செய்திருந்தார்கள். 13 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த இப்பாடல் அண்மையில் இரண்டே நாளில் 10 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது.

காரணம் இப்பாடலின் முதல் வரியை ஒருவர் டிவிட்டரில் மீம் போல வெளியிட, அது என்ன என பலரும் தேட கடைசியில் பாடல் பல கோடி பார்வைகளை பெற்றுவிட்டது.

By Admins