தாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மீர் பவுண்டேசன் மூலமாக உதவியுள்ளார்.

பீகாரின் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு குழந்தை, தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்த வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது. பார்ப்பவர்களை கண்கலங்க செய்த அந்த வீடியோ, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்திவரும் மீர் பவுண்டேசன் மூலமாக அக்குழந்தைக்கு அவர் உதவியுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அந்த சிறுவனை தொடர்புகொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த எதிர்பாராத இழப்பை தாங்கும் வலிமை அவனுக்கு கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அந்த வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு” என பதிவிட்டுள்ளார்.

More Videos 👇👇👇

By admin