சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் 70 ஆவது பிறந்தநாள் நேற்று குடும்பத்தினருடன் கொண்டாடினார்.இதற்கு, அவர்களின் ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, தற்போது ரஜினிகாந்த் அவர்களின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் ரஜினிகாந்த் ‘நவ் ஆர் நெவர்’ (Now Or Never) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டும், பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும், சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் தன் அரசியல் பயணத்தை அறிவிக்கும் போது மாற்றம் இப்போ இல்லனா எப்போவும் இல்ல’எனக் குறிப்பிட்டிருந்தார்.அதன் ஆங்கில வார்த்தைகளே தற்போது பிறந்தநாள் கேக்கில் ‘நவ் ஆர் நெவர்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

By Admins