தற்போது உலகும் முழுதும் நடந்து வரும் விஷயம் குறித்து நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்த கொரோனா வைரஸைன் காரணமாக மக்கள் படும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வளர்ந்த நாடுகளிலும் இதனுடைய தாக்கம் அதிகமாக தான் உள்ளது. குறிப்பாக  அமெரிக்கா, இத்தாலி வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

மேலும்  ஒரு சில நாடுகளில் மருத்துவ துறையில் பணி புரிவோருக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் பிரித்தானியாவில் 8 வயது குழந்தை ஒருவர் தனது தாயை பணிக்கு செல்ல வேண்டாம் என கூறிய விஷயம் வைரலாகி வருகிறது. britain NHS ஊழியராக பணி புரியும் தன் தாயிடம் அம்மா எனக்கு 8 வயது தான் ஆகிறது, எனக்கு உங்கள் அன்பு தேவைப்படுகிறது, நீங்கள் இறப்பதை என்னால் தாங்க முடியாது” என கூறியுள்ளார். இதை பார்க்கும் பொது நமக்கு மிகவும் வருத்தமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அவரின் தாயார் இதயம் உ டைந்தது போல உள்ளது என்கிறார்.

இந்த மண்ணில் இருக்கும்  ஒவ்வொரு குழந்தைக்கும் தன் தாயின் அன்பு தேவைப்படுகிறது. டாக்டர்களும் சாதாரண மனிதர்கள் தான். அவர்களும் குழந்தை குடும்பங்கள் இருக்கும், எம்மை நாம் பாதுகாத்துக்  கொண்டார் அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் இந்த விஷயம் அனைத்து தரப்பு மக்களின் இதயத்தை வருடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

By Admins