கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

தற்போது அவர் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சுனந்தா வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் கடந்த 15 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை. நீண்ட நாள்களாக தாயை பார்க்கதால் தினமும் குழந்தை அம்மாவை பார்க்க வேண்டும் என அழுதுகொண்டே இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று குழந்தையை அவரது தந்தை, தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுனந்தா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்றுள்ளார். தாயை பார்த்ததும் குழந்தை க தறியழ ஆரம்பித்துள்ளது. அப்போது, ‘அம்மா.. வா.. வீட்டுக்கு போகலாம்.. அம்மா வா…’ என குழந்தை ஐஸ்வர்யா அழுததைப் பார்த்தும் சுனந்தாவும் கண்ணீர் விட்டு அ ழுதுள்ளார். தாய், மகளின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

By spydy