பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரை சேர்ந்த தம்பதிக்கு அளவுக்கு மூட நம்பிக்கைகள் மீது அதிகமான  நாட்டம் இருந்துள்ளது.

அந்த பெண் க ர் ப் ப ம் ஆன நிலையில் அவர் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஏற்கனவே அந்த தம்பதிக்கு வரிசையாக அடுத்தடுத்து பிறந்த 3 குழந்தைகளுமே பெண் குழந்தைகளாக போனது.

இந்நிலையில், அந்த பெண் தற்போது மீண்டும் க ர் ப் ப ம் அடைந்துள்ளார்.

ஆனால் தனக்கு பிறக்கப் போகும் நான்காவது குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வேண்டுதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மந்திரவாதி ஒருவரை நாடிய அந்தப் பெண், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவரும் சில சடங்குகளை செய்வதாக கூறி மறுநாள் மனைவியை அழைத்து வரும் படி கணவரிடம் கூறியுள்ளார்.

அடுத்த நாள் சடங்குகள் செய்கிற வைபவம் நிகழ துவங்கியது. சடங்குகள் செய்வதாக கூறி, நிறைமாத  க ர் ப் பி ணி யின் தலையில் கணவனிடம்.
ஆணிஅடிக்கசொல்லியிருக்கிறான்.

முட்டாள் கணவனும் மந்திரவாதி கூறியதை செய்யத் துவங்கினான். ஆண் குழந்தை ஆசையில், மனைவியும் சம்மதித்து, தலையைக் காட்டியபடியே நின்றிருக்கிறாள்.

சிறிது நேரத்தில் வலி பின்னி எடுக்கவே இடுக்கி மூலமாக அதனை பிடுங்க முயற்சித்துள்ளார்.

அம்முயற்சி தோல்வியில் முடியவே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார்.

சுயநினைவுடன் அப்பெண் வந்ததாகவும், ஆனால் வ லி யி ல் கதறியதாகவும் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார்.

எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது 5 செ.மீ. அளவு ஆணி உள்ளே இருந்துள்ளது. மூளையை தொடாமல் இருந்ததால் அப்பெண் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

அறுவை சிகிச்சை மூலமாக ஆணியை அகற்றிவிட்டனர். ஆணி அடிக்க சொன்ன மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post Views: 1

By Admins