சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்துடன் கூடிய டி-சர்ட்டுக்கான ஆர்டர் குவிந்து வருகிறது.

இந்தி குறித்த சர்ச்சைக்கு தமிழகத்தில் என்றும் ஓய்வு கிடையாது. பல ஆண்டு காலமாக இந்தி மொழி பிரச்னை தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. இந்தி மொழி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்டதாக கனிமொழி எம்.பி கூறியிருந்தார். தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் மோசமாக நடத்தியதாக இயக்குனர் வெற்றிமாறனும் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நடிகர் ஹரிஷ்அணிந்திருந்த டி-சர்ட்கள் இணையத்தில் வைரலாகின. I am a தமிழ் பேசும் Indian என்று யுவன் டி-சர்ட் அணிந்திருந்தார். இந்தி தெரியாதா போடா என்று நடிகர் ஹரிஷ் டி-சர்ட் அணிந்திருந்தார்.

டி-சர்ட் வாசகங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து அதுபோன்ற டி-சர்ட்கள் பிரிண்ட் செய்ய திருப்பூரில் ஆர்டர் குவிந்து வருகிறது. இதுவரை சுமார் 15 ஆயிரம் டி-சர்ட் ஆர்டர் வந்துள்ளதாக திருப்பூர் பிரிண்டிங் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By Admins