பொதுவாக கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு 10- 12 கிலோ அளவிற்கு உடல் எடை அதிகரிப்பது இயற்கையான ஒன்றே.

கர்ப்ப காலங்களில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

இதற்காக அதிகம் சாப்பிட வேண்டியதில்லை, சத்தான கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிகரித்த எடையை குழந்தை பிறந்தவுடனேயே குறைக்க பலரும் முயற்சி செய்கிறார்கள், குறிப்பாக பலரும் தவறான கண்ணோட்டத்துடன் தங்கள் உணவைக் கூட பெரிய அளவில் குறைத்துக் கொள்வார்கள்.

இது அவர்களுக்குப் பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் இதனால் பலருக்கு தொப்பை குறையாமல் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.

அதனால் சரியான புரிதலோடு தொப்பையை எப்படிக் குறைப்பது என்று தெரிந்து கொண்டால், நீங்கள் எளிதாக விரும்பிய உடல் வாகைப் பெற்று அழகான தோற்றத்தைப் பெறலாம்.

By Admins