கோவையில் ஆளில்லாத பேக்கரி கடையில் கல்லாப்பெட்டியில் பணத்தை போட்டுவிட்டு பிரெட் பாக்கெட்டை வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லும் காட்சி வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதியவர்கள், நோயாளிகள், தனியே அறை எடுத்து தங்கியிருக்கும் பேச்சிலர்களுக்கு பிரெட்டுகள் துரித உணவாக அமைகின்றன.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரெட்டுகள் கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு உதவும் விதமாக கோவை ரத்தினபுரியிலுள்ள ”நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட் கடை” உரிமையாளர் இந்த நூதன முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஒரு பிரெட் பாக்கெட் 30 ரூபாய் என விலை வைத்துள்ள உரிமையாளர், அங்குள்ள கல்லாப்பெட்டியில் பணத்தை போட்டுவிட்டு, பிரெட்டை எடுத்துச் செல்லலாம் என எழுதி வைத்துள்ளார். அதன்படி வாடிக்கையாளர்களும் பணத்தை போட்டுவிட்டு, பிரெட்டை எடுத்துச் செல்கின்றனர்.

By spydy