பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் தொடங்கவுள்ளது. அண்மையில் புரமோவும் வெளியாகிவிட்டது. தற்போது கொரோனா காலம் என்பதால் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு தடை செய்ய சொல்லி யாரேனும் பிரச்சனை செய்தால் அதை சமாளிக்க சட்ட ஆலோசகர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கேப்ரியேல், நடிகர் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி, சூப்பர் சிங்கர் ஆஜித் என சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சீசன் 2 ல் பாடகராக அனந்த் வைத்யநாதனும், சீசன் 3 ல் மோகன் வைத்யாவும் கலக்கினார்கள். அவர்களின் இடத்தை நிரப்பும் விதமாக சீசன் 4 ல் கிராமிய பாடகரான வேல்முருகனை ஓகே செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மதுர குலுங்க, ஆடுங்கடா மச்சான் என பல ஹிட் பாடல்களை பாடி மனங்களை கவர்ந்தவர்.

By Admins