களேபரமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 படம் பல சிக்கல்களில் சிக்கி இன்னும் படப்பிடிப்பு முடிக்கப்படாமல் உள்ளது. உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் இந்தியன். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிகக்ப்பட்டது. அறிவிப்பு வெளியானாலும் படம் தொடங்குவதில் பல சிக்கல்கள் எழுந்தன. ஒருவழியாக தொடங்கினாலும் முழுவீச்சாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.

பல தடங்கல்களால் படப்பிடிப்பு நின்று நின்று நடந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து ஒன்றினால் மொத்தமாக படப்பிடிப்பே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா லாக்டவுனும் சேர்ந்து கொண்டதால் அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர் படக்குழுவினர்.

இப்போது படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்துக்குள் தன்னை வைத்து எடுக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளையும் எடுத்துக்கொள்ள சொல்லி கமல் சொல்லியுள்ளாராம். ஏனென்றால் அதன் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் முழுக் கவனம் செலுத்த உள்ளாராம். இதைக் கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்ற யோசனையில் உள்ளனராம்.

By Admins