வட்டிலப்பம் என்பது இலங்கை முஸ்லிம்களின் விசேட உணவாகும். இது இலங்கை முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் வலீமா திருமான விருந்துகளில் பிரதான உணவுக்குப் பின் வழங்கப்படுவதுண்டு. தமிழர்களும், சிங்களவரும் கூட இதை உண்பதுண்டு. தற்போது இதனை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

கோழி முட்டையால் தயாரிக்கப்படுகிறது. அசைவம் சாப்பிடக்கூடிய தமிழர்களும், சிங்களவரும் கூட இதை உண்பதுண்டு. சைவர்கள் இதை தவிர்த்துக்கொள்கின்றனர். இது மதியுணவுக்குப் பின்னரோ, அல்லது இரவு உணவுக்குப் பின்னரோ சுவைக்காக உண்ணும் ஒரு உணவு.பெயர் வரக்காரணம்: வட்டில் (நீருக்குள் நீர் கொண்ட மற்றொரு பாத்திரத்தை வைத்து அவிக்கும் முறை) அவித்த அப்பம். வெளிர் கபில நிறம் தொடக்கம் கருங்கபில நிறம் வரை வேறுபட்டு காணப்படும்.
தேவையான பொருட்கள்

தேங்காய் பால் (தகரத்தில் அடைத்த) – 1 கப் , பசுப்பால் 2 % – 1 கப் , கித்துள் கருப்பட்டி – பாதி (கித்துள் கருப்பட்டியின் நிறை தெரியவில்லை. கனடாவில் நிரு பிரண்ட்இல் இரண்டு கருப்பட்டிகளை ஒரு பையில் விற்கிறார்கள், அதில் ஒரு பகுதி போதும் , முட்டை – 4 , கறுவா பொடி – 1 / 2 தேகரண்டி , சாதிக்காய் பொடி – 1 / 4 தேகரண்டி

செய்முறை

oven ஐ 180 பாகை செல்சியைல் சூடாக்கவும்.கித்துள் கருப்பட்டியை பொடியாக்கி தேங்காய் பாலில் கரைத்து வடிகட்டியில் வடிக்கவும் (சிலநேரம் மண், மற்றும் மரத்துண்டுகள் கலந்திருந்தால் அவற்றை நீக்க உதவும். விருந்தினர்களுக்கு கல்லு மண்ணுடன் உணவு பரிமாறகூடாது தானே).

பசுப்பால், கித்துள் கருப்பட்டி கரைத்த தேங்காய் பால், கறுவா, சாதிக்காய் என்பவற்றை கலக்கவும்.முட்டையை உடைத்து பால் கலவையினுள் கலந்து மெதுவான வேகத்தில் மின் கலக்கி (electric mixer) மூலம் கலக்கவும்.எண்ணெய் தடவிய oven இல் வைக்ககூடிய 4 சிறிய பாத்திரங்களில் கலவையை சமனாக உற்றவும்

கலவை கொண்டிருக்கும் பாத்திரங்களை பெரிய cake tray இனுள் வைத்து பத்திரங்கள் பாதி முடும்வரை cake tray ஐ சுடு நீரால் நிரப்பவும்.oven இல் வைத்து 20 – 25 நிமிடங்கள் சமைக்கவும். பல்லு குத்தும் ஈர்கால் குற்றி பார்க்கும் பொது அதில் வட்டிலப்ப கலவை ஒட்டாது வரவேண்டும். கலவை ஒட்டி வந்தால் மேலும் சிறிது நேரம் சமைக்கவும்.

நீராவியில் அவிப்பதை நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீராவியில் அவிக்கும்போது வட்டிலப்பம் அளவுக்கு அதிகமாக பொங்கி , குளிரவிட சுருங்கிவிட்டது. பார்க்க அழகாக இல்லை.

By Admins