விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர்.தற்போது அதிகப்படியான நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடிவதில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர், ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளர். பாவனா சில வருடங்கள் எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை.

அதன் பிறகு பாவனா சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தார். அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களை பதிவு செய்து மேலும் பிரபலமானார்.

பலருக்கும் பாவனாவுக்கு திருமணம் ஆனது தெரியாது.இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. சமீபத்தில் பாவனா தனது கணவருடன் இருக்கும் ஒன்றை பதிவிட்டு ‘திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தான் இது போன்ற புகைப்படங்களை எடுக்க முடிகிறது பதிவிட்டுள்ளார்.

பாவனா, கிரிக்கெட் மற்றும் மற்ற விளையாட்டின் தொகுப்பாளியாக சென்று விட்டதால் தற்போது இவரை தமிழ் நிகழ்ச்சிகளில் அவ்வளவாக காண முடிவதில்லை. இருப்பினும் எப்போதாவது சில நிகழ்ச்சிகளில் தலையை காண்பித்து வருகிறார் பாவனா. மேலும், இன்று நடைபெற இருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கூட இவர் தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

By spydy