தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் ஒருசில நடிகைகள் முதல் படத்தில் கிடைக்கும் புகழை பயன்படுத்தி ஒரு சரியான இடத்தை நோக்கி செல்கின்றனர்.

அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், எந்த கதை களத்திற்கு ஏற்பவும் நடிக்கும் திறமை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இன்னும் திருமணம் செய்யவில்லை.

கடந்த வாரம் உகாதி பண்டிகை நடைபெற்றது.ஆனால், இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் கலை இழந்து உள்ளது.

உகாதி பண்டிகை என்றால் ஆறு சுவை கொண்டு ஆறு வகையான உணவு பதார்த்தங்களை செய்து கொண்டாடுவது மரபு. சந்தோஷம், சோகம், கோபம், பயம், வெறுப்பு, ஆச்சரியம் என ஆறு குணங்களுக்கு ஆறு வகையான உணவுகளை செய்து மக்கள் கொண்டாடுவார்கள்.

இது கர்நாடக மற்றும் ஆந்திர மாநில மக்களால் அதிகம் கொண்டாடப்படுகின்றது. அதில், ஆச்சரியத்தை குறிக்கும் உணவான மாங்காயை வைத்து செய்யும் உகாதி பச்சடி-யை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்து அந்த புகைப்ப்டத்தை வெளியிட்டு உகாதி வாழ்த்து கூறியுள்ளார்.

இதனை பார்த்த பலரும், நீங்க தமிழ் என்று நினைத்திருந்தோம். நீங்கள் தெலுங்கா..? என்று கேட்டு வருகிறார்கள்.

By spydy