இன்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைந்து நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்து முடிந்தது.

இதில் விஜய்யின் ஸ்பீச் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது.ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு இருந்தது விஜய்யின் ஸ்பீச் என்று கூட கூறலாம்.

அந்த வகையில் மேடையை அதிரும் அளவிற்கு பேசினார் தளபதி விஜய். பேசுவது மட்டுமல்ல நடமாடி அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தினார் என்று தான் சொல்லவேண்டும்.

தளபதி விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போது “நண்பர் அஜித் மாதிரி வரலாம் நினைச்சேன்” என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது இவர் கூறிய ஒரே வார்த்தை நண்பர் அஜித் என்ற வார்த்தை இந்தியளவில் மிக பெரிய ட்ரென்டாகி வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் எலியும் பூனையுமாக சண்டை போடும் இவர்களது ரசிகர்களுக்கு இவர்கள் உண்மையில் எவ்வளவு நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வு காட்டியுள்ளது.

By spydy