பொண்ணுங்களே கிடைக்காமல் கஷ்டப்படும் 90 கிட்ஸ் இருக்கையில் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் இரு மனைவிகளை திருமணம் செய்வதை கலாச்சாரமாகவே கொண்டு வாழ்ந்து வரும் கிராம மக்களின் வாழ்க்கை கண்டு பலர் வாயடைத்து போய் உள்ளனர்.’இந்த ஊர்ல எல்லாருக்குமே 2 பொண்டாட்டி தான்…’ ‘லாரி பிடிச்சாவது கெளம்பி போவோம்டா…’ சமூக வலைத்தளங்களில் புலம்பும் 90’S கிட்ஸ்…!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் என்னும் மாவட்டம் அதாவது இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் தேரசர் இங்கு  தான் மிகவும்  விசித்திரமான ஒரு பழக்கம் காணப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட கல்யாணம் ஆகாமல் தவிக்கும் 90’s கிட்ஸ் அனைவரும் லாரி பிடித்தாவது அந்த தேரசர் கிராமத்திற்கு  புறப்பட்டு போகலாம் என சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர் இது வைரலாகி உள்ளது.

உண்மை செய்தி என்னவென்றால் அந்த கிராமத்தில் வசிக்கும் அணைத்து ஆண்களுக்குமே கட்டாயம்  இரண்டு மனைவிகள் தானாம் . சுமார் 600 பேர் மட்டும் குடியிருக்கும் இந்த கிராமத்தில் இந்த வழக்கம் மத சடங்காக இல்லாமல் ஒரு பண்பாட்டு கலாச்சார முறையாக பார்க்கப்படுகிறது. மேலும் அப்பகுதியில் வாழும் இந்து மதத்தினர் மட்டுமில்லாமல் பிற மதத்தினரான இஸ்லாமியர்களும் இந்த பழக்கத்தை பின்பற்றுகின்றனராம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரு காரணம்:

இரு மனைவி இதற்கு ஒரு வித  காரணத்தையும் கூறுகின்றனர் அப்பகுதி கிராம  மக்கள். அந்த கிராமத்தில் இருக்கும் ஆண் மகன்கள் திருமணம் செய்ய எண்ணினால் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ வேண்டும்,  பிறகு கட்டாயம் இரண்டாவது ஒரு பெண்ணையும் திருமணம் செய்ய வேண்டுமாம். காரணம் என்ன என்றால் முதலாவதாக திருமணம் செய்த பெண்ணிற்கு இங்கு குழந்தையே பிறக்காது என கூறப்படுகிறது.

இதனால் தனக்கு வாரிசு வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்கள் கட்டாயம்  இரண்டாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சூழல் அந்த கிராமத்தில் உருவாகிறது என்கின்றனர். மேலும் இதற்கு சரியான காரணம் தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்கள் அனைவருமே  இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அந்த பெண்ணின் மூலமே அவர்கள் குழந்தையை பெற்றுக்கொள்கின்றனர்.

பழங்காலம் முதல் அங்கு வசிக்கும் ஆண்கள் முதல் மனைவி மூலம்  குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அது முடியாமல்  முயற்சித்து தனது வாழ்நாளில் பாதி காலம்  வரை அதற்காக காத்துகிடந்துள்ளனர் என்றும் ஒரு தரப்பினரால்  கூறப்படுகிறது. அத்தகைய ஆண்கள், மீண்டும் இரண்டாவது ஒரு  திருமணம் செய்து கொண்ட போது விரைவில் , குழந்தைகளைப் பெறுகிறார்கள் என்றும் சிலரால் நம்பப்படுகிறது. இந்த ஒரு  முக்கிய காரணத்திற்காகவே  இளைஞர் இரண்டு பெண்களை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறாராம்.

இதில் குறிப்பிடதக்க செய்தி என்னவென்றால் அவர்கள்  முதல் மனைவி இரண்டாவது மனைவி இருவருக்கும் எந்த வித கோபம் சண்டை  பொறாமை இன்றி ,பாதுகாப்பற்ற தன்மையால் சண்டையிடாமல் உள்ளனராம்.

By Admins