செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனவர் ப்ரியா பவானி ஷங்கர். அவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அதை தொடர்ந்து சினிமாவில் அறிமுகம ஆனார் அவர். அறிமுக படமான மேயாத மான் வெற்றி பெற்றதால் அதன் பிறகு அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் வந்தது.

தற்போது அவர் கைவசம் அரை டஜனுக்கும் மேல் படங்கள் உள்ளன.இது ஒருபுறம் இருக்க அவரை பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி வந்துகொண்டு தான் இருக்கின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சீரியல் நடிகர் ஒருவரை பல வருடங்கள் காதலித்து பிரிந்துவிட்டார் என்று கூட செய்திகள் வந்தது.

அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் காதலில் இருக்கிறார் என்றார்கள். இது என்னடா வம்பா போச்சு என தன்னுடைய நிஜ காதலரை அறிமுகப்படுத்தி விட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.

கொரோனா தொ ற்றால் நாடு முழுதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் சினிமா தொழிலும் முடங்கி கிடக்கிறது. நடிகர் , நடிகைகளும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஊரடங்கு மற்றும் கொரோனா குறித்த அடுத்தடுத்த தகவல் காரணமாக மக்கள் ஒருவித இறுக்கமான மனநிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், கொரோனாவிற்கு எதிரான இந்தியர்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்கு, டார்ச் லைட், செல்போன் லைட்டுகள் போன்றவற்றை ஒளிர விட்டு ஒற்றுமையை காட்டுவோம் என பாரத பிரதமர் மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக மோடியை எதிர்கிறேன் பேர்வழிகள் இதற்கு காமெடி மற்றும் நையாண்டி கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.அதில், இணையத்தில் வைரலான வீடியோ கவுண்டமணி, செந்தில் காமெடி தான்.

அந்த காட்சியில் நடிகர் மகேந்திரன் சிறு பையனாக நடித்திருப்பார். இந்த வீடியவை பார்த்த அவர் ” நாம செய்தியில வர அளவுக்கு ட்ரெண்ட் ஆகியிருக்கோம் ” என கூறியுள்ளார். இதனை பார்த்த ப்ரியா பவானி ஷங்கர் நீங்கள் ஒரு இலுமினாட்டி என எனக்கு தெரியும் என கிண்டலாக கூறியுள்ளார்.

By admin