மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தான் இறப்பதற்கு முன்பு தன் கர்ப்பிணி மனைவிக்கு குழந்தை பொம்மையை பரிசளித்துள்ளார்.ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மருமகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 7ம் தேதி மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரின் மனைவி மேக்னா ராஜ் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். தான் அப்பாவாகப் போகும் சந்தோஷத்தில் இருந்த சிரஞ்சீவி சார்ஜா மேக்னாவுக்கு குழந்தை பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார்.

கடந்த 7ம் தேதி மதியம் சிரஞ்சீவி தன் வீட்டில் மயங்கி விழுந்ததும் அவரை ஜெயநகரில் இருக்கும் சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருடன் மேக்னாவும் மருத்துவமனைக்கு வந்திருந்தார். கதறி அழுது கொண்டே அப்பொழுது மேக்னா அந்த பொம்மையையும் எடுத்து வந்துள்ளார்.

தற்போது அந்த குழந்தை பொம்மையின் புகைப்படத்தை சிரஞ்சீவி மற்றும் மேக்னா ஆகியோரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மை காதலை இந்த காலத்தில் பார்ப்பது அரிது. அப்படி உண்மை காதல் அமைந்தும் அந்த வாழ்க்கை இப்படி பாதியிலேயே பறிபோய்விட்டதை நினைத்து ரசிகர்களும் கண்ணீர் சிந்தியுள்ளனர்.

By spydy