இயற்கையாகவே காய்கறிகளில் விட்டமின் மற்றும் தாது சத்துக்கள் நிறைந்து காணப்படும். உடலுக்கு வலு சேர்க்கும் ஒருசில காய்கறிகளில் தான் உடல் சூட்டையும் கிளப்பி விடும் தன்மை கொண்டது.

எனவே உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த காய்கறிகளை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.

பொதுவாக கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த சில காய்கறிகள் உடல் சூட்டை அதிகப்படுத்தும்.

கொழுப்பை குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்புபவர்களுக்கு இது போன்ற காய்கறிகள் பயனுள்ளவையாக இருக்கின்றன.

ஆனால் கோடைக்காலங்களில் வெப்பக் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும் நாட்களில் இது போன்ற காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.

உடல் சூடு அதிகரிப்பதால் நம்மில் பலருக்கும் ஹார்மோன் சமநிலையற்ற தன்மைகள், அரிப்பு மற்றும் பிற தோல் வியாதிகள், மூலம் மற்றும் பிற செரிமானக் கோளறுகள் வரக்கூடும். இதற்க்கு தீர்வாய் தவிர்க்க வேண்டிய காய்கறிகளை வரிசைப்படுத்தியுள்ளோம்.

இஞ்சி

இஞ்சி இயற்கையாகவே நமது உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை உடைய காய்கறி வகையைச் சேர்ந்தது. எனவே, உடல் சூட்டைக் குறைக்க நீங்கள் நினைத்தால், இஞ்சி சாப்பிடுவதை குறைக்கவும் அல்லது தவிர்க்கவும். ஆனால், சிறதளவு இஞ்சியை உடலில் சேர்த்துக் கொண்டால் அது உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மிளகாய்

மிளகாய் என்றாலே படிக்கும்போதே காரம் கண்ணை கட்டும். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகயிவற்றில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

கேரட்

உடலின் இரத்த ஓட்டத்தை பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும் கேரட் தான் உடல் சூட்டிற்கும் காரணமாக விளங்குகிறது.

வெங்காயம்

இயல்பாகவே வெங்காயம் நமது கண்களில் எப்படி நீரை வரவழைக்கிறதோ அதே போல் உடலின் நீர் அளவையும் குறைத்து உடல் வெப்பத்தை அதிகரித்து உடல் நல குறைவை ஏற்படுத்தும்.

பச்சை நிற காய்கறிகள்

கீரைகள், பசலைக்கீரை மற்றும் பிற பசுந்தழைக் காய்கறிகள் உடலுக்கு மிகவும் நன்மை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே.

இதுபோன்ற கீரைகளை சாப்பிடும் போது உடலில் சேரும் புரதங்களால் பெருமளவு வெப்பம் உடலில் உருவாகும், அளவாக எடுத்து கொள்ளவேண்டும்.

By Admins