மனித குலத்திற்கே சவாலாக திகழும் கொரோனாவிற்கு சர்வதேச அளவில் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பா திக்கப்பட்டுள்ளனர்; சுமார் 90 ஆயிரம் பேர் உ யி ரிழந்துள்ளனர். கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள தனிமைப்படுதலும் சமூக விலகலுமே ஒரே வழி என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகள், ஐபிஎல் தொடர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு போட்டிகளை காட்டிலும் உ யி ர் தான் முக்கியம் என்பதால் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொ ரோ னாவை எதிர்கொள்ள நிதி திரட்டும் விதமாக, ரசிகர்கள் இல்லாமல், ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் நிதி திரட்டும் வகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை துபாயில் நடத்தலாம் என்று அக்தர் கருத்து தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடரில் ஆடுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா நிறுத்திவிட்டது. சர்வதேச தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் ஆடிவருகிறது. அப்படியிருக்கையில், கொரோனாவால் நெருக்கடியான சூழல் உருவாகியிருக்கும் இந்த நிலையில், உ யி ரை பணயம் வைத்து, அதுவும் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆட வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. அதைத்தான் கபில் தேவ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அரசு எ ந்திரம் எப்படி கொரோனாவை எதிர்த்து செயல்படுகிறது என்பதும் அதற்கு அனைவரும் எப்படி ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்பதும்தான் முக்கியமே தவிர, எங்களுக்கு பணம் முக்கியமல்ல. பிசிசிஐ சார்பில் இந்திய பிரதமர் நிதிக்கு ரூ.51 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. நிதியுதவி செய்யும் அளவிற்கு செழிப்புடன் தான் பிசிசிஐ இருக்கிறது. எனவே எங்களிடம் போதுமான பணம் இருப்பதால் நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை.

உ யி ரை பணயம் வைத்து ஆட வேண்டிய அவசியமில்லை. இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவது வீரர்களுக்கு ரிஸ்க். அந்த ரிஸ்க்கை எடுக்க முடியாது. இன்னும் 5-6 மாதங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி யோசிக்கவே முடியாது என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

By admin