கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை சமாளிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருங்கள், பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும், இணையத்தில் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் பிரதமர் மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஆகியோரது பொது நிவாரண நிதிக்கு குறிப்பிட்ட தொகையை தானும், அனுஷ்காவும் வழங்கியுள்ளதாக கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில், “மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அளிக்கும் நிவாரண நிதி அவர்களுடைய வலியை ஓரளவு போக்கும் என நம்புகிறோம்” என்று கோலி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுவதால் தாங்கள் எவ்வளவு தொகை வழங்கினோம் என்ற விவரத்தை கோலி வெளியிடவில்லை.

அதில், தோனி ரூ.1 லட்சம் மட்டுமே நிவாரண நிதியாக கொடுத்தார் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவ அதனை காட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார் தோனியின் மனைவி சாக்ஷி. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கே தொகை குறித்த விவரத்தையே சொல்லாமல் விட்டிருக்கிறார் கோலி.

இதற்கு முன்பு, சுரேஷ் ரெய்னா 51 லட்சம் நிதியுதவிம், ரோகித் சர்மா 80 லட்சம் நிதியுதவிம் வழங்கி இருந்தனர். தற்போது விராட் கோலி இதுவரை நிதி கொடுக்கவில்லை என விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடியாக மூன்று கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக ட்விட்டரி வெளியாகியுள்ளது.

By admin