என்ன டைட்டில் பார்த்ததுமே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்… இருந்தாலும் சொல்றேன்… ஆமாங்க நான் சொன்னது நம்ம பிக் பாஸ் சீசன் 4 பாலாஜி -சிவானி யத்தான்… இவங்களுக்குள்ள ஆரம்பத்துல எதுவுமே இல்லாமத்தாங்க இருந்திச்சி… ஏதோ டாஸ்க், டெஸ்ட்-ன்னு சொல்லி அவங்களை ஜோடி சேர்த்து விட்டாங்க… அப்புறம்… ரெண்டு பேருக்கும் நடுவுல, காதல் தான் அப்படின்னு அடிச்சு சொல்ற லெவல்-க்கு தான் அவங்களும் நடந்துக்கிட்டாங்க… இதற்கிடையில.. சிவானி கூட நடிச்ச நடிகரை இறக்கி ஏதாச்சும் பிளான் பண்ணுவாங்க அப்படின்னு பார்த்தா? கடைசி வரைக்கும் அவர் வரவே இல்லங்க… சரி அவர்தான் வரல… இவங்களாச்சும் லவ் பண்ணட்டும்னு விட்டா? அதிரடியா சிவானியோட அம்மாவ இறக்கினாங்க பாருங்க… ப்பா செம்ம டுவிஸ்ட்… ஒடி வந்து மகளை கட்டிபிடிச்சு பாசத்தை காட்டுவாங்கன்னு பார்த்தா? வந்து பளாருன்னு ஒரு அறை…. நீ இங்க எதுக்கு வந்த? லவ் பண்றதுக்கா? இனிமேல் உன்னை அவனோட சேர்ந்து பார்த்தேன்.. அவ்ளோதான் என அவர் மிரட்ட… அவ்வளவுத்தாங்க லவ் வு போச்சி… அதுக்கப்புறம்.. பிக்பாஸ் விட்டு வெளிய வந்ததுக்கு அப்புறம் கூட, அவங்க ரெண்டு பேரும் பெருசா பேசிக்கல.. ஏன் ஒரு போட்டோ கூட சேர்ந்து எடுத்துக்காம இருந்தாங்க.. இப்ப திடீர்னு நம்ம சிவானி – க்கு பிறந்த நாள் விழா ஏற்பாடு பண்ணி, பாலாஜியே சிவானிக்கு, கேக் ஊட்டி விடுறாருங்க.. அதை அவர் இன்ஸ்டா பக்கத்துலை போஸ்ட் பண்ணிருக்காரு… அது மட்டுமில்ல… சிவானி கூட எக்கசக்கமா போட்டோ எடுத்து போட்டுருக்காரு… எங்கடா அவங்க அம்மா-ன்னு பார்த்தா? அவங்களும் அங்கத்தான் இருக்காங்க.. என்னடா நடக்குது இங்க… ஒரு வேளை வீட்ல ஒகே சொல்லிட்டாங்களோ? எப்படியோங்க அடுத்த ரியல் ஜோடி ரெடி போல… ம்… பார்க்கலாம்… இது இன்னும் எவ்வளவு தூரம் போகுதுன்னு…. வாசித்தவர்களுக்கு நன்றி…

By maddy