தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அந்தவகையில் மேகா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ருஷ்டி டாங்கே.இவர் அந்த திரைப்படத்தில் வரும் புத்தம் புது காலை பாடலின் மூலம் பிரபலமாகி இருந்தாலும் அவர் அறிமுகமானது காதலாகி எனும் திரைப்படத்தில்தான். பின்பு சேரன் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.கன்னத்தில் குழி விழும் அழகில் ரசிகர்களை மயக்கினாலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை.தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறையவே இவர் தனது இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் தனது இணைய பக்கத்தில் இவர் தொடர்ந்து ஒரே டவுசர் போட்டுக்கொண்டே புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் ரசிகர்கள் வேற டிரஸ் எது இல்லையாமா என கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

By admin