பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரிநேசன் கடந்த நாட்களுக்கு முன் கனடாவில் மா ரடைப்பு காரணமாக உ யிரி ழந்தார். இவரின் இ ற ப்பு செய்தியை கேட்டு குடும்பமே நிலைகுலைந்து இருக்கிறது.இந்த நிலையில், லாஸ்லியா இலங்கைக்கு செல்ல விஜய் டிவி உதவி வருகிறது. இலங்கைக்கு விரைந்து செல்லும் ஏற்பாடுகளை லாஸ்லியா செய்து வருவதாக, வனிதா விஜயகுமாரும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீக்கிரமே விரைந்தாலும், கொரோனா காலம் என்பதால், 14 நாட்கள் குவாரண்டைனில் வைக்கப்பட்ட பின்னர் தான் லாஸ்லியாவால் அவரது வீட்டுக்கு செல்ல முடியும் என்கிற சூழல் உள்ளதாக லாஸ்லியாவுக்கு வேண்டப்பட்டவர் தகவல் தெரிவித்துள்ளார்.

அதனால், அப்பாவின் இறுதி அஞ்சலியில் அவரால் கலந்து கொள்ள முடியுமா? ஸ்பெஷல் பர்மிஷன் ஏதாவது கிடைக்குமா? என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளார் லாஸ்லியா இதனால் இலங்கைக்கு அவர் சென்றாலும், அப்பாவின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது.

By Admins