பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜெயசித்ராவின் கணவர் உடல்நல குறைவால் கா லமானார்.தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, சிவக்குமார்,ரஜினி,கமல்  என பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா.இவர் புதுப்புது அர்த்தங்கள், மாமன் மகள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கே.பாலசந்தரின் அரங்கேற்றம் திரைப்படம் தான் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது.கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் தான் பிரபல இசை அமைப்பாளர் அம்ரீஷ்.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் அறிமுகமான இவருக்கு, கே.பாலசந்தரின் அரங்கேற்றம் படம் சிறந்த அடையாளமாக அமைந்தது. பிறகு கமல்ஹாசனின் சொல்லத்தான் நினைக்கிறேன், பணத்துக்காக, பட்டாம்பூச்சி, தேன் சிந்துதே வானம், இளமை ஊஞ்சலாடுகிறது உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெயசித்ரா அவர்களின் கணவர் கணேஷ் உடல்நல குறைவால் திருச்சியில் இன்று கா லமானார்.ஜெயசித்ராவின் கணவர் ம றைவுக்கு திரையுலகினர் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நாமும் அவரது ஆத்மா சாந்தி அடைய பி ரார்த்திப்போம்.

By Admins