திரையுலகை பொறுத்தவரை, சில சமயம் சாத்தியங்கள் அசாத்தியங்கள் ஆகும், பல சமயங்களில் அசாத்தியங்கள் கூட சாத்தியமாகும்… அது போலத்தான், இன்று வரை நடித்துக் கொண்டிருப்பவர்கள் கூட, நம்  மனதில் நுழைந்து வந்த வழியே சென்று விடுவார்கள்..

ஆனால் சில பேர் சில படங்கள் மட்டுமே நடித்து. திரையுலகை விட்டே சென்றிருப்பார்கள்.. ஆனால் இன்றளவும், அவர்கள் படத்தை பார்க்கும் போடோ? பாடல்களை கேட்கும் போதோ, அவர்கள் முகம் சட்டென்று நினைவில் வந்து போகும்.. ஏதோ ஒரு உள்ளுணர்வு, அவர்களை வெறும் நடிகை, நடிகர் என்றெல்லாம் தோன்றாமல், யாரோ நமக்கு தெரிந்தவர்கள் என்று சொல்லும்…

அப்படி மனதில் பதிந்த நடிகைகளில், தமிழ் மற்றும் மலையாள பிரபல நடிகை கோபிகா-வும் ஒன்று… பிரணயமணித்தூவல் என்ற மலையாளப்படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.. அதன் பின், 4ஸ்டூடன்ஸ் படத்தில், பரத் ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு வந்தார்…

மலையாளத்தில் பல படங்கள் நடித்திருந்தாலும், தமிழிலும், ஆட்டோகிராப், கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, எம்டன்மகன், வீராப்பு, வெள்ளித்திரை, போன்ற குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவர் தமிழ் ரசிகர்கள் மனதில் அழியாத ஒரு இடத்தை பிடித்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். காரணம் கண்ணைக் கவராத ஆடைகளிலும், மென்மையான குணத்தாலும்.. ஏதோ ஒரு இடத்தில் எங்கள் வீட்டுப்பெண் என்று நினைத்துவிட்டார்கள்…

2002-ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர், 2008-ஆம் ஆண்டு அஜிலேஸ் என்ற மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டார்… பின் ஐந்து வருடங்கள்? திரைப்பயணத்தை நிறுத்தி வைத்தவருக்கு, ஆமி என்ற ஒரு பொண்ணும், ஆய்டன் என்ற ஒரு பையனும் இருக்கிறார்கள்.. அதைத் தொடர்ந்து… 2013-ஆம் ஆண்டு மீண்டும் சில மலையாளப்படங்களில் நடித்தவர், அதன் பின் தன் திரைப்பயணத்தை முற்றிலுமாக முடித்துவிட்டார்..

தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், முற்றிலும் நடிப்பை விட்டு விட்டதாகவும், தகவல்கள் வெளிவந்தது… இந்நிலையில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது, அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார்.. எப்படியோ அவர்களின் குடும்ப வாழ்க்கையும் இப்போது போல் எப்போதும் மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என ஒரு ரசிகனாய் ஒரு வேண்டுக்கோள்.. மேலும் இது போன்ற தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்…

By maddy