தற்போது மக்களை குஷிப்படுத்தவும், நாட்டு நடப்புகளை நக்கல் செய்து மீம்ஸ் செய்யவும் ஏராளமான யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன.

மீம்ஸ் செய்வதற்கென்ற பலர் யூ டியூப் சேனல்களை தொடங்கி அதில் பலர் வெற்றியும் கண்டுள்ளனர். அதன் மூலம் அடுத்த நிலைக்கு உயர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்களில் நடித்தல் என முன்னேறி வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவையை மையமாக வைத்து உருவான யூ டியூப் சேனல் தான் ‘எருமை சாணி’. ஏரியா ஆண்ட்டி, டபுள் மீனிங் ஜோக்குகள் என என்னதான் அறுவெறுப்பாக இருந்தாலும் மக்கள் அந்த சேனல் மட்டுமல்லாமல், அதில் நடித்த பலரின் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

இந்த சேனலில் நடித்த ஹரிஜா இதன் மூலம் பிரபலமடைந்த நிலையில், ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

சமீப காலமாக வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அட்டகாசமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

By spydy