நடிகர் விவேக் எஸ்பிபி பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்ற குரல்தான் சமூக வலைதள பக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாரதிராஜா, ஆர்வி உதயக்குமார், கங்கை அமரன், தேவா, சித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து டிவிட்டரையே திணர வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் பியானோவில் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடலை பாடி அவருக்காக பிரார்த்தனை செய்தார். இதனை ரசிகர்கள் தற்போது இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

By Admins