ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் விவரங்களை அகற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை, புகையிலை எதிர்ப்பு மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் சாதனையாளர்கள் குறித்த பாடத்தில், நடிகர் ரஜினிகாந்த், சார்லி சாப்ளின், ஸ்டீவ் ஜாப்ஸ் உள்ளிட்டோரின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்’ என்ற பாடத்தில் ‘பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்’ என்று குறிப்பிட்டு அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை ஊக்குவித்திருப்பதால், மாணவர்களும் அதை பின் தொடர நேரிடும் என தமிழ்நாடு புகையிலை தடுப்பதற்கான மக்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் தங்கள் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

By Admins