நீர் விளையாட்டு தெரியுமா? கிராமப்பகுதியில் இருப்போருக்கு இந்த விளையாட்டு ரொம்பவே பரிச்சயம். குழந்தைகள் ஊரில் உள்ள நீர் நிலைகளில் இதை விளையாடுவார்கள். நீருக்குள் நிற்பவரின் தலையை தொட வேண்டும். தொட வேண்டியவர் அருகில் செல்லும் போது விளையாடுபவர் தலையை தண்ணீருக்குள் அமிழ்த்தி விடுவார். அதை பார்க்கவே அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியானால் நீர் வாழ் உயிரினங்களின் விளையாடு வசீகரிப்பதற்கு கேட்கவா வேண்டும்?

craig capehart என்ற ஸ்கூபா டைவிங் வீரர் ஒருவர் அவரது நண்பர்கள் மூன்று பேருடன் ஆப்ரிக்காவின் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சார்டைன் மீன்களை பிடிக்கச் சென்றார். அவர் சென்றிருந்த ஈஸ்டர்ன் கேப் ப்ரோவின்ஸ் பகுதியில் அப்போது எதிர்பாராதவிதமாக நாற்பதாயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் துள்ளிக் குதிக்கும் வீடியோ அவர்களது கேமராவுக்குள் சிக்கி உள்ளது.

இந்த ஹம்பக் ரக திமிங்கலம் ஆனது தண்ணீரோடு தொடர்பே இல்லாமல் துண்டாக உயரப் பறந்து மீண்டும் தண்ணீருக்குள் குதித்தது. இப்படி முற்றாக நாற்பதாயிரம் கிலோவையும் தூக்கி ஹம்பக் ரக திமிங்கலம் குதிப்பது இதுவரை யாருடைய கேமராவிலும் பதிவானது இல்லை.

நீங்களே வீடீயோவைப் பாருங்களேன்…அதிசயித்துப் போவீர்கள்.

By admin