ஒரு ஏழை குடும்பத்தில் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடக்கிறது.மூத்த பெண்ணிற்கு சீதனம் அதிகம் கொடுத்து திருமணம் நடந்து முடிந்தது…இரண்டாவது பெண்ணிற்கு சீதனத்தில் குறை வருகிறது. “நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் என் தங்கையின் திருமணம் இருக்கு!” என்கிறான் அந்த மாப்பிள்ளை.

இதனால் மண்டபத்தில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. திடீரென மண்டபத்தில் ஒரு இளைஞன் எழுந்து “இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன்!” என்கிறான்.யாருக்கு யார் துணை என்பது ஆண்டவன் போட்டுவைத்த முடிச்சு என்பது போல இரண்டாவது பெண்ணுக்கும் அந்த இளைஞனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

மூத்த பெண், கணவன் மனைவிக்குள் ஒரு சிறு சண்டைகள் எழுந்தாலும் கூட “நான் ஒன்றும் சும்மா வரவில்லை! லட்ச லட்சமாக பணம் வாங்கிக்கொண்டு தானே திருமணம் செய்தீர்கள்!” என்று சொல்லியே தன் கணவனை நோ கடித்தாள்.ஒரு நாள் அவள் கணவன் ஆசையாக அவள் அருகில் வந்து “உனக்கு வேற ஏதும் ஆசைகள் உண்டா!!! என்று கேட்க “ஆமாம் இருக்கிறது!

சீதனம் என்ற பெயரில் என்னை விலைக்கு வாங்கிய என் ஆசை புருசனுக்கு “பெண் குழந்தையாகவே பெற்றுக்கொடுக்க ஆசை என்று சொல்லி வாய்விட்டு அழுகிறாள்.அப்போதுதான் கணவன் அவள் தந்தை இடத்தில் யோசித்து தான் செய்த தவறை எண்ணி மனம் நொந்து அழுகிறான்.இதேபோலவே இரண்டாவது சகோதரி வீட்டிலும் வேலைக்குச் சென்று வீட்டிற்கு வந்த தன் கணவனுக்கு உணவு எடுத்து வைக்கிறாள், அப்போது தன் கணவனிடம் கேட்கிறாள்.

ஏனுங்க! மண்டபத்தில் என் மீது இரக்கம் கொண்டு தானே திருமணம் செய்தீர்கள். அதை கேட்ட கணவன் ஒரு மென்மையான சிரிப்புடன் ஒரு பிடி சோறு எடுத்து அவளுக்கு ஊட்டிவிட்டு சொல்கிறான்.அப்படி இல்லை தங்கமே! என் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர்!” என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் கூறினான்.

By Admins