இந்தியா முழுவதிலும் 40,263 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 10,887 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 1,306 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதிலும் நேற்றுவரை ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன‌. இந்த ஊரடங்கு உத்தரவு நாள் தினக்கூலி தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களைவிட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் பெரிதாக பாதிக்கப்பட்டனர்.

பணமும் இன்றி, சொந்த ஊருக்கும் செல்ல இயலாமல் அவர்கள் சந்திக்க நேர்ந்த துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்போது தான் ஒவ்வொரு மாநில அரசாங்கமும் வேறு மாநிலத்திலுள்ள தங்களுடைய மாநிலத்தை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக ரயில்களை இயக்க முடிவெடுத்துள்ளனர்.

அவ்வகையில் குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து அகமதாபாத் செல்வதற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் அந்த ரெயிலில் செல்வதற்கு கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் தொழிலாளி ஒருவரிடம் அவ்வளவு பணமில்லை.

உடனடியாக அவர் ஒருகையில் கைக் குழந்தையையும் மற்றொரு கையில் சூட்கேஸை சுமந்துகொண்டு 265 கிலோமீட்டர் தூரம் வரை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் பெரிதளவில் வைரலாகியது.

இதுபோன்று தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் இவர்கள் செல்வதற்காக இலவசமாக ரயில்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

By admin