கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடைக்கும் இந்த வேளையில் வேலையின்றி கையில் பணமின்றி சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வருகினறனர்.கொரோனா நிவாரண நிதியாக மக்களில் பலரும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் நிவாரண கணக்கிற்கு நிதி வழங்கி வருகின்றனர். ஒரு சிலர் நேரடியாக மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களுக்கு எப்போதும் உதவும் நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்சம் மத்திய அரசு நிவாரண நிதிக்கும், 50 லட்சம் தமிழக அரசின் நிவாரண பணிக்கும் என மொத்தம் 3 கோடி நிதி அறிவித்தார். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழகியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். அது போதாது தனது உயிரை பெரிதாக எண்ணாமல் தூய்மை செய்யும் துப்புரவு தொழிலார்கள் நலனுக்காக 25 லட்சம் ரூபாய் நிதி உதவியும் செய்துள்ளார், மேலும்,

செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்தினர் அவர்களின் நலனுக்காக ரூபாய் 15 லட்சம் கொடுத்துள்ளார். இன்னும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .இதுபோக ரூபாய் 50 லட்சம் சினிமா துறையை சேர்ந்த பெப்சி அமைப்புக்கும், 50 லட்சம் நடன இயக்குனர் அமைப்புக்கும், 25 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், மேலும், 75 லட்சம் ராயபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காவும் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.

இந்நிலையில்,மிகவும் வறுமையில் வாடும் மாற்றுத் திறனாளிகள் ஒரு 50 பேருக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் தலா ரூபாய் 25 ஆயிரம் செலுத்தியுள்ளார். பல்வேறு வகைகளில் மக்களுக்கு உதவி வரும் நடிகர் ராகவா லாரன்ஸூக்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

மக்கள் பலரின் மனதில் எழும் கேள்வி நமக்கு இப்படி யாரும் உதவ முன்வரவில்லையே..!ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழகியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

By admin