நடிகர் அமிர்கானுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…!ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15,000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அ திர்ச்சி.. டெல்லியில் குறிப்பாக ஏழை மக்கள் வசிக்கின்ற பகுதிக்கு 23.4.2020 அன்று இரவில் ஒரு லாரி வந்தது.அந்த லாரியில் கோதுமை மாவு ஒரு கிலோ பாக்கெட்டுகள் மட்டும்  நிறைய இருந்தது.

எல்லோரும் வாங்க ஒரு பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று அதில் இருந்த சகோதரர்கள் கூறினார்கள் . ஒரு கிலோ மட்டும் தானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் யாரும்  வந்து அந்த  வரிசையில் நிற்கவில்லை.

ஆனால் பசி கொண்ட ஏழைகள் இதனை நாம் ஒரு நேரம் உணவுக்கு பயன்படுத்தலாமே என்று வாங்கினார்கள்.இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்துவிட்டு அனைவரும் உறங்கிவிட்டனர்.

மறுநாள் காலையில் அனைவருக்கும் அ திர்ச்சி காத்திருந்தது.சமைப்பதற்காக அந்த  மாவு பாக்கெட்டை பிரித்த போது, அந்த பாக்கெட்டுக்குள் ரூபாய் 15000 இருந்தது. பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிதென வாங்கியவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்தியவர் வேறு யாருமில்லை நம்ம  நடிகர் அமீர்கான்.மக்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் உதவலாம் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

அந்த மாவு பாக்கெட்டை வழங்கியவர்களுக்கு கூட அதில் இருந்தது 15000 ருபாய் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது.உதவி செய்யும் உள்ளங்களுக்கு நன்றிகள்…

By Admins