சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளியின் புதைவடிவங்களை அவுஸ்திரேலியாவில் நிபுணர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.அவுஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைகழக போரசிரியரும், புதைவடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தில் தெற்கு பகுதிகளில் புதைவடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒட்டாகோ என்னும் பகுதியில், 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த ராட்சத கிளியின் புதைபடிவங்களை கண்டுபிடித்துள்ளார். அந்த கிளியின் உயரம் ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் பாதிக்கும் மேலானது என கூறப்படுகிறது. அதாவது 3 ½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கலாம் என அறியப்படுகிறது.

அந்த கிளிக்கு ”ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ்” என ஆய்வாளர்கள் பெயர் வைத்துள்ளனர். அதாவது கிரீக் நாட்டின் வலிமையான, அஜானுபாகுவான கடவுள் என கூறப்படும் “ஹெர்குளஸ்” என்ற பெயரின் அடிப்படையில் ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயர் வைத்துள்ளதாக தெரியவருகிறது.

2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரா ட்சத கிளியின், மாதிரி ஓவியம் ஒன்றை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2010 ஆம் அண்டு 3 கிலோ எடை கொண்ட ”ககபோ” என்ற கிளி, இதே நியூசிலாந்து பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By Admins