அனுஷ்காவுக்கும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் பிரபாஸ்க்கும் காதல் என்று 90’s Kids களுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் சொல்லிவருகிறார்கள். ஆனால் அவர்களோ நாங்க நண்பர்கள் என்று கூலாக மறுத்து விடுகிறார்கள். ஆனால், இருவரின் ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அவ்வளவு பொருத்தம் என்பது இன்டஸ்ட்ரி கணிப்பு. வயது ஏறிக்கொண்டே போனாலும் இருவருமே திருமணம் செய்துகொள்ளாததால், ‘உங்களுக்குள்ள என்னதாங்க நடக்குது?’ என்று கேட்காத ரசிகர்கள் இல்லை.

இதுபற்றி ஒவ்வொரு மீடியா சந்திப்பின்போதும், தானாக இப்படியொரு கேள்வி வந்துவிடும். ஆனால், பதில் மட்டும் மழுப்பலாக வரும். இந்நிலையில் தற்போது பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடித்தார் ராணா. சில நாட்களுக்கு முன் ராணா அவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று ராணாவே சொல்லிவிட்டார்.

ஆனா அந்த படத்தில் நடித்திருக்கும் பிரபாஸுக்கு பொண்ணு பார்க்கிறோம் பொண்ணு பார்க்கிறோம் என்று அவருக்குப் பொண்ணு பிறக்கும் வரை இதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் போல. இந்த செய்திகள் எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதுபோல் இன்னொரு செய்தி வந்துள்ளது அதாவது சிரஞ்சீவியின் தம்பி ஆனந்தபாபுவின் ஒரே மகள் நிகாரிகா என்னும் நடிகையை தான் பிரபாஸ் திருமணம் செய்ய போவதாக தகவல் வந்துள்ளது .

நிகாரிகா வேறு யாரும் இல்லை நம் தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார். இதையறிந்த அனுஷ்கா ரசிகர்கள் அனுஷ்காவுக்கு அல்வாவா என்று பிரபாஸை திட்டி வந்தார்கள். ஆனால் அக்கட தேசத்தில் உள்ள நிகாரிகாவிடம் விசாரித்தால் “இதெல்லாம் சுத்த பொய் எவன்தான் இப்படி கிளப்பி விடுகிறானோ ?” என்று புலம்புகிறார்.

By admin