விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு திரைப்படத்தில் தீம்தனக்க தில்லானா என்ற பாடலை பாடி அனைவரது ரசிகர்களையும் கொள்ளைக் கொண்டவர்  தியா இவர் மேலும் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் என் ஜன்னல் வந்த காற்றே போன்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்களில்பிரபலமானவர் லிஸ்டில் இருப்பவர் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு நண்பர் ஷிபி தினகரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

இதனையடுத்துஅவர் சமீபகாலமாக டிவி நிகழ்ச்சியில் தன்னை வெளி காட்டாமல் இருந்து வந்தார் இந்த நிலையில் தனது கணவருடன் வெளிநாட்டில் தங்கி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது லேப்டாப், போன், விலை உயர்ந்த ஆடைகள், பணம் போன்றவற்றை வழிப்போக்கர்கள் கொள்ளையடித்தனர் இதனால் அவர் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக இதனையடுத்து அவர் போலீசாரிடம் அளித்துள்ளார்.

இருப்பினும் சொல்லும் அளவிற்கு நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதனால் தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். இவரது கணவரின் அலுவலக டாக்குமெண்ட் கள் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதனால் தியா அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பயணப்பட விரும்புபவர்களுக்கு என் அறிவுரை, கவனமாக, கவனமாக, கவனமாக இருங்கள். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் வெளியில் சில மனிதர்களுக்கு எந்த கொள்கைகளும், உணர்ச்சிகளும் இல்லை. மற்றவர்களின் இழப்பு குறித்து, காயம் குறித்துக் கவலையில்லை. ஒரு வழியாக வீடு திரும்பினோம். அக்கறை காட்டிய, எங்களுக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

By spydy