சமந்தா க ர்ப்ப மாக இருப்பதாக தகவல் வெளியான நேரத்தில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமந்தா வெளியிட்ட அந்த வீடியோவை பார்த்தவர்கள் இவர் க ர்ப்பம் எல்லாம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டதாக செய்திகள் வெளியானது. சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சமந்தா கர்ப்பமாக இருப்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் சமந்தா ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சமந்தா ஜிம்மில் 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், வாவ் சம்மு, 100 கிலோ எடையை தூக்குவது சாதாரண விஷயம் அல்ல. உங்களை பார்க்கவே பெருமையாக உள்ளது. உங்களை பார்த்தால் எங்களுக்கும் ஒர்க்அவுட் செய்யும் ஆசை ஏற்படுகிறது என்று பெருமையாக தெரிவித்துள்ளனர்.

சமந்தாவின் ஒர்க்அவுட் வீடியோவை பார்த்த சினிமா ரசிகர்களோ, அவர் கர்ப்பமாக இருந்தால் இப்படி 100 கிலோ எடையை தூக்குவாரா?. சமந்தா நிச்சயம் கர்ப்பமாக இல்லை. கர்ப்பிணி யாரும் ஜிம்மில் இப்படி மாங்கு மாங்குனு ஒர்க்அவுட் செய்ய மாட்டார் என்கிறார்கள். சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்தே அவர் கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதும், அதை அவர் மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இம்முறை இன்னும் அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமந்தா விக்னேஷ் சிவனை சந்தித்து படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், தனக்கு பதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று சில நடிகைகளின் பெயர்களை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

By admin