நபர் ஒருவரின் ஜீன்ஸ் பேண்டின் பின்புறம் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதை மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ வீடியோவாக வெளியிட்டதை பார்த்த நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.

நாகலாந்தில் தேனீக்களுக்கும், தேனுக்கும் பஞ்சமில்லா இடமாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டிலும் டிசம்பர் 5 ஆம் திகதியில் தேனீக்கள் தினமாக அந்த ஊர் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில் தேனீக்கள் நபர் ஒருவரின் பேண்டில் கூடுக்கட்டியுள்ள சம்பவம் அங்கிருப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் அவரை பார்த்து சுற்றியிருப்பவர்கள் கிண்டலடித்து கேலி செய்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜூ இந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

 

By Admins