நியூயார்க்கின் புகழ் பெற்ற ப்ரூக்ளின் பிரிட்ஜில் காதல் ஜோடி ஒன்று தங்களின் காதலை வெளிப்படுத்தும் போது எடுக்கப்பட்ட சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூயார்க்கின் ப்ரூக்ளின் பிரிட்ஜ் உலகளவில் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று ஆகும். உலகம் முழுவதும் இளைஞர்கள் தங்கள் காதல் துணைக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காதலை வெளிப்படுத்துவது இயல்பு.

அதேபோல் தான் கிறிஸ் விகோ என்னும் இளைஞர் நியூயார்க்கின் ப்ரூக்ளின் பிரிட்ஜில், தன் காதலி ஏஞ்சலினா ரிவேராவை முழங்காலில் நின்று திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.

அந்த காதல் ஜோடியின் உணர்வுமிக்க நிகழ்வை விகோவின் நண்பர் ஜோசுவா ரொசாரியோ வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை நன்றாக சென்ற அந்த காதல் நிகழ்வுகள் பாலத்தில் வந்த சைக்கிள் ஓட்டுனரால் தலைக்கீழாக விழுந்தது அதிர்ச்சியடைய செய்தது, மேலும் அது நகைச்சுவையாகவும் மாறியுள்ளது.

இந்த அற்புத நிகழ்வை படம் பிடிக்க சென்ற ரொசாரியோ அங்கு வந்த சைக்கிள் ஓட்டுநர் எரிக் சோய் மீது மோதி, இருவரும் தரையில் விழுந்து புரண்டாலும், பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று என்.பி.சி நியூயார்க் தெரிவித்துள்ளது.

என்னதான் தன் தோழி கீழே விழுந்து அடிபட்டிருந்தாலும், ரிவேரா விகோவின் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார் ஏஞ்சலினா ரிவேரா.

 

 

View this post on Instagram

 

If you want a proposal to never forget come propose in NYC 😂 highly recommend 😭

A post shared by @ chrispainx on

By Admins