நடிகை அதுல்யா ரவி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.ஒரு சில படங்களிலே மக்களுக்கு பிடித்த நடிகையாக மாறிப்போனார்.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் நடிகையாக மாறினார்.

இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக தான் வெளியானது அதன் பிறகு அதன் வெற்றியால் பெரிய படமாக மாறி திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்தநிலையில் தற்போது ஜெய் நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.ஜெய்-க்கு ஜோடியாக அதுல்யா ரவி, வைபவி என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் பெரிதாக வெற்றியடையவில்லை.

அது மட்டும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.இவர் கடைசியாக “ஏமாளி” திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியை தூக்கலாகவே கட்டி நடித்திருந்தார். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் உருவாக இருக்கும் அந்த படத்தில் அதுல்யா ரவி நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க திருமணத்திற்கு பிறகு முதலிரவில் ஏற்படும் பிரச்சனைகளை பேசுவதாக இருக்கும் எனவும் படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

By spydy