நடிகை கீர்த்தி சுரேஷ் 17 அக்டோபர் 1992 ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றினார். தெலுங்கு வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதி படத்தில் நடிகை சாவித்ரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமார் ஆகியோரின் மகள். கீர்த்தி 2000 களின் முற்பகுதியில் குழந்தை நடிகையாக நடிக்கத் தொடங்கினார் மற்றும் பேஷன் டிசைனைப் படித்த பிறகு படங்களுக்குத் திரும்பினார். 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலியில் அவர் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

மேலும் அவர் அதன் பிறகு ரிங் மாஸ்டர், இது என்னா மாயம், ரஜினி முருகன், ரெமோ , நேனு சைலாஜா, பைரவா, நேனு லோக்கல், தானா செர்ந்தா கூட்டம், மகாநதி, சண்டகோஜி 2, சர்க்கார் மற்றும் சாமி 2 போன்ற பல படங்களிள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல விதமான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். இது என்ன மாயம் என்ற படத்தில் அறிமுகம் ஆகி ரஜினி முருகன் என்ற சிவகார்த்திகேயன் படத்தில் இளைஞர்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். அதன் பின் தளபதி விஜயுடன் பைரவா, சர்கார் போன்ற படங்களில் நடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

மேலும் இவர் கமெர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தி டீரென்று “மகாநதி” என்ற படத்தில் சாவித்திரியாக நடித்து அசத்தினார். அவரது நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டினார்கள். சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு கீர்த்தி தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இப்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் மற்ற அணைத்து மொழிகளிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். முக்கியமாக பாலிவுட் சினிமாவில் நுழைய மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் ப ரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிறு வயதில் மொட்டை அ டித்து முடி வளர்ந்தது போல கீர்த்தி சுரேஷ் கியூட்டாக இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

By Admins