தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.

இது போதாதென்று வித்தியாசமான விளையாட்டு நிகழ்ச்சிகளும் பல சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது.அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேம் ஷோ சூப்பர் மாம்.முதல் சீசன் மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கிவருகிறார்.

இந்தநிலையில் இந்த கேம் ஷோவில் பங்கேற்ற நீப்பாவிற்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவே பிரபலமான நீபா காவலன் திரைப்படத்தில் வடிவேலுவுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் இருப்பார்.

2013 ஆம் ஆண்டு திருமணமான இவர் அதன்பின்னரும் சில படங்களிலும் சில சீரியல்களிலும் நடித்துவந்தார்.இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது.தற்போது நடந்துவரும் சூப்பர்மாம் ஷோவில் கடுமையான போட்டியாளராக இருந்துவருகிறார்.

தற்போது இந்த போட்டியில் ஒரு டாஸ்கில் ஒரு புறம் இருக்கும் தொட்டியிலிருந்து மறுபுறம் இருக்கும் தொட்டிக்கு தாவுகிறார்.தாவும் போது சரியாக குதிக்காததால் பக்கவாட்டில் உள்ள தொட்டியில் மோதி பலமாக அடிபட்டுள்ளது.இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

By admin