கொரோனாவால் இந்தியாவில் நடந்த இயற்கை அதிசயம்!கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், காற்று மாசுபாட்டின் அளவு பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இதை உறுதிப்படுத்தும் விதமாக ​​நாசாவின் செயற்கைக்கோள் படம்பிடித்த இந்தியாவின் புகைப்படம் நம்பமுடியாத சில அதிர்ச்சி தகவலைப் பதிவு செய்துள்ளது.நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள், மார்ச் 31ம் திகதி முதல் ஏப்ரல் 5ம் திகதிக்கு இடையில் படம்பிடித்துள்ளபுகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதில்வட இந்தியாவில் காணப்படும் ஏரோசோலின் அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது என்று பதிவாகியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு ஏரோசோல் மதிப்பீடு இந்த ஆண்டு தான் பதிவாகியுள்ளது என்று நாசா அதிர்ச்சி தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளது.நாசாவால் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் இந்த பதிவு, இந்த ஆண்டு நம்பமுடியாத தகவலைப் பதிவு செய்துள்ளது. மானுடவியல் என்று சொல்லப்படும் மனிதனால் உருவாக்கப்பட்ட மூலங்களிலிருந்து வெளிவரும் நஞ்சு ஏரோசோல்கள் பல இந்திய நகரங்களில் ஆரோக்கியமற்ற அளவிலான காற்று மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

இந்த காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் மனிதர்கள் தான் என்பதே உண்மை.ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம் நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தின் மூலம் 2020ம் ஆண்டின் ஊரடங்கு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்களால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதைபடிவ உமிழ்வுகள் குறைக்கப்பட்டுள்ளது என்று இந்த புகைப்படம் ஆதாரத்துடன் தெரிவிக்கிறது.இந்த பதிவு கடந்த 20 ஆண்டுகளில் காணப்படாத அளவிற்கு மிகவும் குறைந்த ஏரோசோல் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உலகளவில் சில பெரிய மாற்றங்களை மனிதர்களுக்கு நிரூபித்துள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். பருவகால தூசி புயல்கள் தொடங்கும் போது, இந்த ஏரோசல் அளவு இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்துவரும் வாரங்களில் சற்று அதிகரிக்கக்கூடும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

By admin