கொரோனா வைரஸால் ம ரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பிய சீன மருத்துவர்களின் கல்லீரல் சேதமானதால், அவர்களின் தோல் கருமையாக மாறிவிட்டதாக கூறியதால், அவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் இரண்டாவது அலை வீசலாம் என்பதால் அந்நாட்டு மிகுந்த எச்சரிக்கையுடன், கொரோனாவால் பா திக்கப்பட்டவர்களை காப்பாற்றும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் வுஹான் நகரில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததன் விளைவாக, மருத்துவர் Yi Fan மற்றும் Hu Weifeng ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் 18-ஆம் திகதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

முதலில் வுஹான் நுரையீரல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவர்கள், அதன் பின்னர் இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் கொரோனாவை கண்டுபிடித்த சீன அரசால் எச்சரிக்கப்பட்டு, கொரோனாவால் இ றந்த Li Wenliang-ன் தோழர்கள் ஆவார்.

கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட இவர்களை காப்பாற்றுவதற்காக ஈ.சி.எம்.ஓ எனப்படும் வாழ்க்கை ஆதரவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இது உடலுக்கு வெளியே உள்ள இரத்தத்தில் ஆக்ஸிஜனை செலுத்துவதன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை மாற்றுகிறது.

ஈ.சி.எம்.ஓ இயந்திரம் மூலம் கவனிக்கப்பட்டு வந்த இவர்கள், ம ரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவர்களின் திடீரென்று கருப்பாக மாறியுள்ளது. வைரஸ் கல்லீரலை சேதப்படுத்தியதால் அவர்களின் தோல் கருமையாகிவிட்டதாகவும், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் இந்த மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர் ஒருவர் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து குணமடைந்து வரும் மருத்துவர் Yi Fan கூறுகையில், நான் முதலில் சுயநினைவைப் பெற்றவுடன், எனது நிலையைப் பற்றி அறிந்த பிறகு, பயந்தேன்.

மருத்துவர்கள் ஆறுதல் அளித்து வந்தது, அவர்களின் ஆலோசனைக்கு பின்னரும், படிப்படியாக சகஜ நிலைக்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார்.

இவர், இப்போது வுஹானின் சீனா-ஜப்பான் நட்பு மருத்துவமனையில் ஒரு சாதாரண வார்டில் கவனிக்கப்பட்டு வருகிறார்.

இவருடன் ஒப்பிடும் போது Hu Weifeng நிலை தற்போது வரை மோசமாகவே உள்ளது. சிறுநீரக மருத்துவரான இவர் 99 நாட்கள் படுக்கையில் இருக்கிறார்.

அவரது ஒட்டுமொத்த உடல்நலம் ப லவீனமாக உள்ளது. Hu Weifeng-ன் மன ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதாகஇவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் லி ஷுஷெங் கூறினார்.

Hu Weifeng பிப்ரவரி 7 முதல் மார்ச் 22-ஆம் திகதி வரை ஈ.சி.எம்.ஓ சிகிச்சையை மேற்கொண்டார் . ஏப்ரல் 11-ஆம் திகதி அன்று பேசும் திறனை மீண்டும் பெற்றார். தீ விர சிகிச்சை பிரிவுகளில் இன்னும் கவனிக்கப்பட்டு வருகிறார்.

சிகிச்சையின் ஆரம்பத்தில் அவர்கள் பெற்ற ஒரு வகை மருந்து காரணமாக மருத்துவர்களின் தோல் கருமையாகிவிட்டது என்று சந்தேகிப்பதாகவும், தோல் நிறம் மேம்பட்ட பிறகு மருத்துவர்களின் தோல் நிறம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் மருத்துவர் லி ஷுஷெங் கூறியுள்ளார்.

By Admins