இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் ஒருநாள் வாலண்டியராக மதுரையில் போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸினை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தவே அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

 

மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த போலீசார் இரவு பகல் பாராது தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். போலீசாருக்கு உறுதுணையாக நேற்று ஒருநாள் மதுரையில் இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் வாலண்டியராக பணியாற்றியுள்ளார்.

சாலையில் போலீசாருடன் இணைந்த சசிகுமார், வெளியில் நடமாடிய மக்களிடம் “நமக்கு வீட்ல இருக்க கஷ்டமா இருக்கு. ஆனா, நமக்காக இவங்க வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுறாங்க. நாமதான் ஒத்துழைக்கணும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார் சசிகுமார்.

By Admins