உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்தியாவில் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் மிகுந்த சேவை மனப்பான்மையுடன் கொரோனா நோயாளிகளை குணமாக்கி வருகின்றனர்.

மேலும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை செயல்படுத்த காவல்துறையினரும் மிகவும் போ ராடி வருகின்றனர். இவ்வாறு கொரோனாவை விரட்ட போராடும் அனைத்து கொரோனா போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய விமானப்படை விமானங்கள் இன்று வானில் பறந்து மலர் தூவி மரியாதை செலுத்தின.

ஜம்மு காஷ்மீரில் துவங்கி கேரளா வரையிலும் உள்ள அனைத்து மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளின் மேல் பறந்து சென்ற விமானப்படை விமானத்தில் இருந்து மருத்துவமனைகள் மீது மலர் தூவப்பட்டன. இந்த மரியாதையை ஏற்கும் வன்னம் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் நின்று கையசைத்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் மேல் பறந்து விமானப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். ஆங்காங்கே எடுக்கப்பட்ட சில வீடியோ தொகுப்புகள் இதோ:

By Admins