ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா நோ யின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1178 ஆக உயந்துள்ளது .

இந்தநிலையில் சேலத்தில் உள்ள ஜெயந்தி ஸ்வரூபா எனும் மருத்துவர் கொரானாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.மருத்துவ மேலாண்மை படிப்பும் கிராமப்புற மருத்துவமும் படித்துள்ளார்.மேலும் நேச்சுரோபதியும் படித்துள்ளார்.

இந்த தடுப்பூசியை கண்டுபிடித்தவுடன் சேலம் கலெக்டரிடம் ஒப்படைத்துள்ளார். கொரானாவிற்கு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இந்த மருந்து கண்டுபிடித்திருப்பது அனைவர்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதுபற்றிய விபரங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இதனுடைய சோதனை முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.இந்த செய்தி தற்போது சேலம் மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவர்க்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விரைவில் நிலைமை அனைத்தும் சாதாரணமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin