நடிகை ஆல்யா மான்ஸா சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், குழந்தையை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல ரிவி தொடர் ராஜா ராணி மூலம் ஒன்று சேர்ந்த இந்த ஜோடிகளுக்கு, சில வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.சமீபத்தில் குழந்தையின் கையை தாங்கி பிடித்திருக்கும் சஞ்சீவ், அனைவரும் வீடுகளில் மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ள ஆல்யா தனது குழந்தைக்கு ‘அய்லா செய்யத்’ என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

By spydy